ஜேர்மன் அருங்காட்சியகத்தில் ஒரு சிறு பெண்ணுக்கு சிலை வைத்து கௌரவம்: யார் அந்த பெண்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்குக்கு சிலை வைத்து கௌரவம் செய்துள்ளது ஜேர்மனி.

ஜேர்மனியின் ஹாம்பர்கிலுள்ள மெழுகுச்சிலைகள் அருங்காட்சியகத்தில் சுவீடன் சுற்றுச்சூழல் ஆர்வலரான ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்குக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு தத்ரூபமாக கிரேட்டாவைப்போலவே இருக்கும் அந்த மெழுகுச் சிலையைப் பார்த்தால் அதை சிலை என்றே சொல்ல முடியாது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், கிரேட்டாவின் சிலையை திறந்து வைப்பதை புகைப்படக்கலைஞர்கள் புகைப்படம் எடுக்கும் காட்சியைக் காணமுடிகிறது.

அதில் கிரேட்டா அந்த அருங்காட்சியகத்தில் உண்மையாகவே நிற்க, அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படக்கலைஞர்கள் புகைப்படம் எடுப்பதைப்போலவே இருக்கிறது அந்த காட்சி.

Gottfried Kruger என்னும் சிற்பி அந்த சிலையை உருவாக்கியுள்ளார்.

Markus Scholz/dpa via AP

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers