கூகுளையே ஏமாற்றிய ஜேர்மானியர்: ட்ராபிக் ஜாம் என நம்பி மக்களை திசை திருப்பிய கூகுள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லினில் அமைந்துள்ள முக்கிய சாலை ஒன்றில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதாக கூகுளையே ஏமாற்றியுள்ளார் ஒரு ஜேர்மானியர்!

Simon Weckert என்னும் கலைஞர், ஒரு கை வண்டியில் 99 மொபைல் போன்களை இயங்கும் நிலையில் வைத்துக்கொண்டு, பெர்லினின் முக்கிய தெருக்கள் வழியே அந்த வண்டியை இழுத்துக்கொண்டே வந்திருக்கிறார்.

அந்த மொபைல் போன்கள் எல்லாமே, தங்கள் லொக்கேஷனை கூகுள் சர்வர்களுக்கு தெரியப்படுத்த, அதை உண்மை என்று நம்பி, அந்த பகுதியில் கூட்ட நெரிசல் இருப்பதாக கூகுள் மேப் காட்டியுள்ளது.

இந்த திட்டத்தை பயன்படுத்தி, ஒரு சாலையை போக்குவரத்து நெரிசல் உள்ளதாக காட்டி, வாகனங்களை வேறுபக்கம் திருப்பி விட்டு விட்டு, போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சென்றுவிடலாம் என்கிறார் Weckert.

பெர்லிலின் உள்ள கூகுள் அலுவலகம் முன்பாகவே அவர் வண்டியை இழுத்துக்கொண்டு செல்ல, அப்போது கூகுள் மேப் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக காட்டியதுதான் வேடிக்கை!

கூகுள் மேப் நிறுவப்பட்டு 15 ஆண்டுகள் ஆனதன் நினைவுநாள் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், Weckertஇன் இந்த வேடிக்கைச் செயல், கூகுள் மேப்பில் உள்ள ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது எனலாம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers