தாய்ப்பாலில் விஷம்... கைது செய்யப்பட்ட நர்ஸ்... வழக்கில் அதிரடி திருப்பம்: மன்னிப்பு கேட்ட அரசு வழக்கறிஞர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தாய்ப்பாலில் விஷம் கலந்து குழந்தைகளை கொல்ல முயன்றதாக நர்ஸ் ஒருவர் கைது செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, அந்த பாலில் நச்சுப்பொருளே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஜேர்மனியிலுள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென ஐந்து குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் ஐந்தும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், நல்ல வேளையாக மருத்துவர்கள் அவைகளைக் கவனித்ததால், உடனடி நடவடிக்கையில் இறங்கி அவர்களைக் காப்பாற்றியுள்ளார்கள்.

அந்த ஐந்து குழந்தைகளுக்கும் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டபோது, morphine என்ற பொருள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது தெரியவரவே,பொலிசாருக்கு உடனடியாக தகவலளிக்கப்பட்டுள்ளது.

விரைந்து வந்த பொலிசார் மருத்துவமனை ஊழியர்களின் லாக்கர்களை சோதனையிட்டபோது, அவற்றில் ஒன்றில் ஊசி போட பயன்படும் ஒரு சிரிஞ்ச் ஒன்று கைப்பற்றப்பட்டது.

அந்த சிரிஞ்சை தடயவியல் சோதனைக்கு அனுப்பியபோது, அதில் தாய்ப்பாலுடன் morphine கலந்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அப்போது பணியிலிருந்த ஒரு நர்ஸ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், ஆய்வக சோதனையில் அந்த பாலை நீர்த்துப்போக செய்வதற்காக சேர்க்கப்பட்ட ரசாயனம் ஒன்றிலேயே morphine இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது அந்த பாலில் morphine கலந்திருந்ததாக அந்த ஆய்வகம் தவறான பரிசோதனை முடிவை அளித்துள்ளது.

எனவே, கைது செய்யப்பட்ட நர்ஸ் உடனடியாக விடுவிக்கப்பட்டதோடு, அரசு வழக்கறிஞர் அவரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.

என்றாலும், குழந்தைகள் பாதிக்கப்பட்ட இரவில் பணியிலிருந்த மருத்துவர்கள் இருவர், நர்ஸ்கள் நான்கு பேர் என ஆறு மருத்துவமனை ஊழியர்கள் இன்னமும் வழக்கில் சந்தேகத்துக்குரியவர்களாகவே தொடர்கிறார்கள்.

தற்போது விசாரணை பல்வேறு கோணங்களில் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers