கொரோனா வைரஸ் அறிகுறிகள் இல்லாதவர்களிடமிருந்தும் நோய் பரவும்: ஜேர்மனி முக்கிய தகவல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சமீபத்தில் சீன தொழிலதிபரான ஒரு பெண் ஜேர்மனி வந்திருந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகள் இல்லாத நிலையிலும், நால்வர் அவரால் பாதிக்கப்பட்டனர்.

அவர் ஜேர்மனியிலிருக்கும் வரையில் அவருக்கு கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

ஆனால், அவருடன் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த பெண் சீனா திரும்பியபின் அவரை தொடர்புகொள்ள முடியாததால், அவரது நிலைமை என்ன என்பதை அறிய முடியவில்லை.

அந்த பெண் குறித்த ஆய்வு சொதப்பலில் முடிந்து விட்டது என்பதால், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாதவர்களிடமிருந்து நோய் பரவாது என்று பொருள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும் சிக்கல் என்னவென்றால், இப்படி கொரோனா வைரஸ் தொற்றியும் அறிகுறிகள் இல்லாதவர்களை விமான நிலையம் போன்ற இடங்களில் ஸ்கிரீன் செய்து கண்டுபிடிக்க முடியாது.

ஆனாலும், அதிலும் ஒரு நல்ல விடயம் இருக்கிறது என்கிறார் பேராசிரியர் Jiang Rongmeng என்பவர்.

காரணம், அறிகுறிகள் இல்லாவிட்டால், அதாவது இருமல் இல்லாவிட்டால், அந்த கொரோனா வைரஸை சுமக்கும் நபர்களிடமிருந்து கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பும் குறைவு என்கிறார் அவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers