பிரெக்சிட்டால் பதவியிழந்த ஜேர்மன் மேயர்: பல்வேறு நாடுகளில் பிரெக்சிட் ஏற்படுத்தி வரும் தாக்கம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரெக்சிட் பல்வேறு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஜேர்மன் மேயர் ஒருவர் பிரெக்சிட்டால் பதவியிழந்துள்ளார்.

பிரெக்சிட்டால் பிரான்ஸ் போன்ற நாடுகளில் மீன் பிடித்தலுக்கு (தற்காலிகமாவது) பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், ஜேர்மனியிலுள்ள ஒரு குட்டிக் கிராமமான Brunsmarkஐ பிரெக்சிட் தாக்கும் என யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

ஆனால், ஸ்காட்லாந்து நாட்டவராக இருந்துகொண்டு, வசதியாக ஜேர்மனியில் செட்டிலாகி, மேயராகவும் பதவி வகித்துவந்த Iain Macnab (70)இன் வேலையை ஒரே நாளில் காலி செய்துவிட்டது பிரெக்சிட்.

ஐரோப்பிய ஒன்றிய நாடான ஜேர்மனியில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக இல்லாத பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் மேயராக இருக்க முடியாது என்பதால், Macnab பதவி விலகவேண்டியதாயிற்று.

Photo: DPA

12 ஆண்டுகளாக அந்த கிராமத்தின் மேயராக பதவி வகித்துவந்தார் Macnab. இனி எனக்கு ஜேர்மனியில் வாக்குரிமை இல்லை, வாக்குரிமை இல்லையென்றால் நான் மேயராகவும் இருக்கமுடியாது என்கிறார் Macnab.

அதுமட்டுமின்றி, Macnab பிரித்தானியாவுக்கு வெளியே 15 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவிட்டதால், லண்டன் நாடாளுமன்ற தேர்தலிலும் அவரால் வாக்களிக்கமுடியாது திடீரென எனக்கு வாக்குரிமை இல்லை என்ற விடயம் என்னை பயங்கரமாக பாதித்துள்ளது என்று கூறியுள்ள Macnab, குடியரசைப் பொருத்தவரை, நான் ஆண்மையற்றவனாக ஆகிவிட்டது போல உணர்கிறேன் என்கிறார்.

ஜேர்மன் பெண் ஒருவரை மணந்துகொண்ட Macnabக்கு, இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். வெறும் 150 பேர் மட்டுமே வாழும் Brunsmark கிராமத்தில் அவர் 28 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார்.

ஸ்காட்லாந்திலுள்ள Achiltibuieஐச் சேர்ந்த Macnab, சரியான நேரத்தில் ஜேர்மனியிலுள்ள மற்ற பிரித்தானியர்கள் செய்ததுபோல், ஜேர்மன் குடியுரிமையும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Photo: DPA

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்