ஒரு தேர்தல்... பதவியிழந்த இருவர்... கட்சித்தலைவர் ராஜினாமா: ஜேர்மன் அரசியலில் குழப்பம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சமீபத்தில் ஜேர்மனியில் நடந்த ஒரு மாகாண தேர்தல், ஜேர்மனி அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

சென்ற வாரம் ஜேர்மன் மாகாணமான Thuringiaவில் தேர்தல் நடைபெற்றது. அதில், Free Democratic Party என்ற கட்சியைச் சேர்ந்த Thomas Kemmerich என்பவர் வெற்றி பெற்று பிரதமராக பதவியும் ஏற்றார்.

ஆனால், Free Democratic Party கட்சியுடன் தொடர்ந்து கூட்டணியைத் தொடரவேண்டுமானால், அவர் பதவி விலகவேண்டும் என அழுத்தம் கொடுத்தார் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்.

அதன்படி அவர் பதவி பறிபோனது. அத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் ஒருவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார் ஏஞ்சலா.

இவற்றிற்கெல்லாம் ஒரே காரணம், Thomas, வலதுசாரிக் கட்சியான Alternative for Deutschland (AfD) கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெற்றதுதான். AfD, புலம்பெயர்தலுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான கொள்கைகளையுடைய ஒரு கட்சி.

Emmanuele Contini/NurPhoto via Getty Images

புலம்பெயர்தல் பிரச்சனையால் பதவியே பறிபோனாலும், தொடர்ந்து அதற்கு ஆதரவாக நிற்பவர் Christian Democratic Union (CDU) கட்சியின் முன்னாள் தலைவரும், ஜேர்மன் சேன்ஸலருமான ஏஞ்சலா மெர்க்கல்.

அப்படியிருக்கும்போது, தனது கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் AfD கட்சியுடன் சேர்ந்து வெற்றிபெற்றது தங்கள் கொள்கைக்கு எதிரானது என்பதாலேயே, அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார் ஏஞ்சலா.

இந்நிலையில், தற்போது ஏஞ்சலா கட்சியின் தலைவராக இருப்பவரும், ஏஞ்சலாவின் நகல், ஆதரவாளர், குட்டி மெர்க்கல் என்றெல்லாம் அழைக்கப்பட்டவருமான Annegret Kramp-Karrenbauer, தனது கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளது ஜேர்மன் அரசியலையே அசைத்துள்ளது.

தான் கட்சித்தலைவராக இருக்கும்போதே தனது கட்சியினர் தங்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட AfD கட்சிக்கு வாக்களித்து ஒரு பிரதமரை தேர்ந்தெடுத்திருப்பார்களானால், தான் தலைவராக இருந்தும் கட்சி தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் பொருள் என்று கருதும் Kramp-Karrenbauer, தான் இனி கட்சித்தலைவர் பதவியில் இருப்பதில் அர்த்தம் இல்லை என தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

ஏற்கனவே ஏஞ்சலா மெர்க்கலும் தனது கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட Kramp-Karrenbauerம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், கட்சி இனி என்ன ஆகுமோ என்ற கேள்வி தொக்கி நிற்க, ஜேர்மன் அரசியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

Jens Schlueter/AFP via Getty Images

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்