என்ன ஆயிற்று தலைவர்களுக்கு... ஈரானுக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய ஜேர்மன் அதிபர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தொடர்ந்து சில நாட்களாக ஜேர்மன் அரசியல்வாதிகள் பல்வேறு காரியங்களில் சொதப்பி வரும் நிலையில், எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில், ஈரானுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி சொதப்பியுள்ளது ஜேர்மன் அதிபர் அலுவலகம்.

வலது சாரியினருடன் கூட்டு வைத்து தேர்தல் வெற்றி, அவருக்கு வாழ்த்துச் சொல்லிய ஏஞ்சலா கட்சி அமைச்சர் என கடந்த சில நாட்களாகவே ஜேர்மன் அரசியல் கலகலத்து வருகிறது.

இந்நிலையில், ஈரான் இஸ்லாமிய புரட்சி தினம் கொண்டாடுவதற்கு ஜேர்மன் அதிபர் அலுவலகத்திலிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டுள்ள விடயம் மீண்டும் ஜேர்மன் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக ஈரானுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையில் உரசல் நிலவி வரும் நிலையில், ஈரான் இஸ்லாமிய புரட்சி தினம் கொண்டாடுவதற்கு வாழ்த்து அனுப்பக்கூடாது என ஏற்கனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜேர்மனியைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

Image: Getty

இந்நிலையில்ஜேர்மன் அதிபர் Frank-Walter Steinmeie, ஈரான் இஸ்லாமிய புரட்சி தினம் கொண்டாடுவதற்கு வாழ்த்து அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து தனது அலுவலக ஊழியர்களிடம் ஆலோசனை செய்திருக்கிறார்.

அதன்படி, இரண்டு கடிதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒன்று வாழ்த்துக் கடிதம் அனுப்புவது, மற்றொன்று வாழ்த்து அனுப்புவதில்லை என்ற முடிவை தெரிவிக்கும் கடிதம்.

ஆனால், கடைசியாக ஈரானுக்கு வாழ்த்து அனுப்பவேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அதிபர் அலுவலக ஊழியர்கள் தவறுதலாக வாழ்த்துக் கடிதத்தை அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

Image: Getty

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்