வித்தியாசமான முறையில் காதலை சொன்ன ஜேர்மானியர்... கூகுள் மேப்பில் சிக்கிய காட்சி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மானிய இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் வித்தியாசமாக காதலை சொல்ல முடிவு செய்தார்.

Huettenbergஐச் சேர்ந்த Steffen Schwarz, காதலியிடம், தனது மக்காச்சோள வயலில் காட்டுப்பன்றிகள் இருப்பதாகக் கூறி அவற்றைப் பார்க்குமாறு ட்ரோன் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

ட்ரோனைப் பறக்கவிட்ட Steffenஉடைய காதலிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ட்ரோன் மேலே பறக்க, Steffenஉடைய மக்காச்சோள வயலில், ’என்னை திருமணம் செய்துகொள்வாயா?’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதைக் கண்ட அவரது காதலி மகிழ்ச்சியில் திளைத்தபடி, உடனே, அவரது காதலை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் கனடாவில் வாழும் Steffenஉடைய அத்தை அவருக்கு ஸ்கிரீன் ஷாட் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் Steffenஉடைய வயலில், என்னை திருமணம் செய்து கொள்வாயா என ஜேர்மன் மொழியில் எழுதப்பட்டிருக்கும் படம் இருந்துள்ளது.

அப்போதுதான் Steffenக்கு தனது புரபோசலை தனது காதலி மட்டுமல்ல உலகமே பார்த்திருக்கிறது என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது.

அதாவது அந்த காட்சி கூகுள் மேப்பில் சிக்க, பலர் அதைப் பார்க்க முடிந்திருக்கிறது.

மீண்டும் ஒரு முறை ட்ரோனை பறக்கவிட திட்டமிட்டுள்ளார் Steffen. இம்முறை, ஜூன் மாதம் நடக்கவிருக்கும் தனது திருமணத்தில் புகைப்படங்களை எடுப்பதற்காக...

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்