25 ஆண்டுகளுக்கு முன் எங்கோ தொலைந்த கேசட்... கலைக்கண்காட்சியில் கிடைத்த அதிசயம்: கூடவே ஒரு எச்சரிக்கை செய்தியும்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தனக்கு 12 வயதாக இருக்கும்போது கேசட் ஒன்றை தவறவிட்டுவிட்டார் ஜேர்மானிய பெண் ஒருவர்.

25 ஆண்டுகளுக்குப் பின் அது கிடைத்துள்ளதோடு, இப்போதும் அது ஒழுங்காக இயங்குவதுதான் பெரிய அதிசயம்.

பெர்லினைச் சேர்ந்த இசை விரும்பியான ஸ்டெல்லா வெடெல், ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றபோது தனது கேசட் ஒன்றை தவறவிட்டுவிட்டார்.

சமீபத்தில், கடலில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கண்காட்சி அமைத்துள்ள மாண்டி பார்க்கர் என்பவரின் கண்காட்சிக்கு சென்ற ஸ்டெல்லா, அங்கு தனது கேசட் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.

விசாரித்தபோது, ஸ்பெயின் சுற்றுலாத்தலம் ஒன்றிலுள்ள கடற்கரையில் மாண்டி அதை கண்டுபிடித்தது தெரியவந்துள்ளது.

Photograph: mark phillips / Alamy/Alamy

அந்த கேசட்டைக் கண்டுபிடித்த மாண்டி அதை பழுதுநீக்கி பாடும் நிலையிலும் வைத்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன் தவறவிட்ட கேசட், பாடும் நிலையில் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளார் ஸ்டெல்லா.

ஆனால், இந்த கண்டுபிடிப்பு ஒரு எச்சரிக்கை செய்தியை கொடுத்துள்ளதாக தெரிவிக்கிறார் கடலியல் ஆய்வாளரான பேராசிரியர் ரிச்சர்ட் தாம்ப்சன் என்பவர்.

பிளாஸ்டிக் பொருட்கள் எவ்வளவு காலத்துக்கு அழியாமல் நீடிக்கின்றன என்பதை இந்த சம்பவம் காட்டியுள்ளதோடு, கடல் சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் எவ்வளவு பெரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கிறார் அவர்.

Photograph: Stella Wedell/PA
Photograph: Stella Wedell/PA

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்