அரசியல்வாதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது குறி: ஜேர்மனியில் ஒரு சிவில் யுத்தம்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் அரசியல்வாதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி, ஒரு சிவில் யுத்தச் சூழலை உருவாக்க முயன்றதாக 12 வலதுசாரியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு ஒரு பொலிஸ் அதிகாரியும் அடக்கம்! கைது செய்யப்பட்டவர்களில் நான்கு முக்கிய குற்றவாளிகள், ஜேர்மனியில் ஒரு சிவில் யுத்தம் போன்ற சூழலை உருவாக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

அவர்கள் அரசியலவாதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் இஸ்லாமியர்களை தாக்குவதன் மூலம் அதை நிறைவேற்ற முடிவுசெய்துள்ளனர்.

அவர்களில் மீதியான எட்டுபேர், அந்த குழுவினருக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் வழங்குவது அல்லது எதிர்கால தாக்குதல்களில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அந்த 12 பேரில், வலதுசாரியினருடன் தொடர்புடையதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியும் ஒருவர்.

ஜேர்மனியின் மொத்த சட்ட ஒழுங்கையும் அமைதியையும் குலைத்து அதை கவிழ்ப்பது கைது செய்யப்பட்டவர்களின் திட்டம் என அதிகாரிகள் நம்புகிறார்கள்.

அவர்களை கைது செய்வதற்காக நடத்தப்பட்ட ரெய்டுகளின்போது, முன்பு அரசியல்வாதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தும் போது பயன்படுத்தப்பட்டது போன்ற துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களும் கிடைத்துள்ளன.

இந்த திட்டம் குறித்து தெரியவந்ததையடுத்து, சேன்ஸலர் ஏஞ்சலா உட்பட பல தலைவர்கள் தங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்