ஜேர்மனியில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கி சூடு... 8 பேர் பலி-பலர் படுகாயம்! பரபரப்பான வீடியோ காட்சி

Report Print Santhan in ஜேர்மனி

ஜேர்மனியில் அடையாளம் தெரியாத நபர் திடீரென்று நடத்திய துப்பாக்கி சூட்டால் 7 பேர் பலியாகியிருப்பதாகவும், சிலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் Frankfurt-ன் கிழக்கில் Hanau-வில் இருக்கும் shisha பாரில் உள்ளூர் நேரப்படி சரியாக இரவு 10.15 மணிக்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக தற்போது வரை 8 பேர் பலியாகியிருப்பதாகவும், 5 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், குறித்த பகுதிக்கு ஏராளமான பொலிசார் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் விரைந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபரை பொலிசார் ஹெலிகாப்டர் மூலம் தேடி வருவதாகவும், தாக்குதல் நடந்து சில நிமிடங்கள் ஆவதால், அவன் இந்த பகுதியை விட்டு தப்புவதற்குள் ஹெலிகாப்டரில் தேடி வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...