ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோடிய சந்தேக நபர் குறித்து பொலிஸ் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் எட்டு பேரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் இருந்த சந்தேக நபர் இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஜேர்மனிய நகரமான ஹனாவ் நகரில் உள்ள ஷிஷா பார்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 5 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், தப்பியோடிய தாக்குதல்தாரியை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், தேடுதல் பணியில் சிறப்பு பொலிசாரும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் ஹனாவில் உள்ள அவரது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர். வீட்டில் மற்றொரு உடலையும் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாகவும், தற்போது இத்தாக்குதலுடன் மற்றவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் தெரியவில்லை என்றாலும், சந்தேக நபர் தனியாக செயல்பட்டதாக பொலிசார் நம்புகின்றனர், இது கண்மூடித்தனமான செயல் என்று உள்ளுர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...