ஜேர்மனியில் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி தாயாரின் புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி தாயாரின் புகைப்படம் முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொபியாஸ் என்பவர் முன்னெடுத்த இருவேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர்.

அதில் ஒருவர் 35 வயதான Mercedes Kierpacz என தெரியவந்துள்ளது. இவர் நொறுக்குத் தீனி மற்றும் குளிர்பானம் வாங்குவதற்காக shisha மதுபான விடுதிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையிலேயே தொபியாஸ் அந்த விடுதிக்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியுள்ளார்.

இதில் மெர்சிடிஸ் கியர்பாக்ஸ் என்பவருக்கு மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. 5 மாத கர்ப்பிணியான அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இவருக்கு 16 வயதில் ஒரு மகனும் 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

ஹனாவ் நகரின் இரண்டு பிரபலமான இடங்களில் முன்னெடுக்கப்பட்ட கொடிய வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட ஒன்பது பேரில் மெர்சிடிஸ் கியர்பாக்ஸ் என்பவர் மட்டுமே பெண் என்று நம்பப்படுகிறது.

கொல்லப்பட்ட ஒன்பது பேரும் புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்டிருந்தனர் என ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெர்சிடிஸ் ரோமானிய போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவர் எனவும் அவர் ஜேர்மானிய குடிமகள் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்