ஜேர்மனியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: வலதுசாரியினரின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் பலியானதையடுத்து மசூதிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் எல்லைப்பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க இருப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வலதுசாரி தீவிரவாதம்தான் ஜேர்மனி எதிர்கொண்டுள்ள மிகப்பெரும் பதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறியுள்ள ஜேர்மன் உள்துறை அமைச்சரான Horst Seehofer, அதை சமாளிப்பதற்காக பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இரத்தம் சிந்தப்பட்டு வருவதாக தெரிவித்தார் அவர்.

அக்டோபரில் Halle நகரில் யூத தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதும், ஜூனில் அரசியல்வாதி ஒருவர், அவரது வீட்டில் வைத்தே கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Horst Seehofer in Hanau on Thursday. Photo: DPA

ஒரு வாரத்திற்கு முன்புதான் மசூதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஜேர்மனி முழுவதிலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்படியும் இனவெறித்தாக்குதலை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில், Hanauவில் 12 பேரை சுட்டுக்கொன்ற நபர், சட்டப்படி உரிமம் பெற்ற ஆயுதங்களை வைத்திருந்தது கவனம் ஈர்த்துள்ளது.

ஒருவர் Hanauவில் துப்பாக்கியால் சுட்டார், ஆனால், அவருக்கு துப்பாக்கிக் குண்டுகளை வழங்கிய பலர் இன்னமும் இருக்கிறார்கள் என்கிறார் ஒருவர்.

ஆகவே, ஆயுதங்கள் வைத்துக்கொள்ள உரிமம் வழங்குவது குறித்த ஒரு விவாதம் தற்போது ஜேர்மனியில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...