என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை: கல் குவாரியில் வரலாற்றாளருக்கு கிடைத்த பொருட்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
765Shares

கல் குவாரி ஒன்றின் கீழ் ஜேர்மனிக்கு சொந்தமான பொருட்களை கண்டெடுத்த வரலாற்றாளர் ஒருவர், தன் கண்களையே தன்னால் நம்பமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அப்படி என்னதான் கிடைத்தது Alderney தீவிலுள்ள அந்த கல் குவாரியில்? அந்த தீவில்தான் அப்படி என்ன விசேஷம்?

Alderney தீவு, இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

1945ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி, ஜேர்மானியர்கள் அந்த தீவை விட்டுச் செல்லும்போது ஏராளமான ராணுவ தளவாடங்களை அங்கு விட்டுச் சென்றுள்ளார்கள்.

அப்போது அந்த தீவை சுத்தம் செய்த பணியாளர்கள் தளவாடங்களை கல் குவாரி ஒன்றிற்குள் போட்டுச் சென்றதாக நீண்டகாலமாக வதந்திகள் பரவி வந்தன.

  

இந்நிலையில், வரலாற்றாளரான Dan Snow என்பவர் ஒரு ஆழ்கடல் நீந்துபவரின் உதவியோடு அந்த செய்தி உண்மையா என அறிவதற்காக களமிறங்கியுள்ளார்.

அதன்படி அந்த கல்குவாரியில் சுவாசக் கருவிகள் உதவியுடன் இறங்கிய Simon Livesey என்னும் அந்த நீச்சல் வீரர், அந்த குவாரியில் நன்னீர் உள்ளதால் அங்குள்ள பொருட்கள் எதுவும் மோசமாக துருப்பிடிக்கவில்லை என்றும், இதற்கு முன் தன் வாழ்நாளில் கண்டிராத அசாதாரணமான பொருட்களை தான் அங்கு கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த குவாரியில் பாதி ஆழமான 9 மீற்றர் ஆழம் சென்றதுமே, அங்கு போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சக்கரங்களுடன் கூடிய பெரிய துப்பாக்கிகள் காணப்பட்டதாக தெரிவிக்கிறார் அவர்.

Image: HISTORY HIT

முன்பு உலவி வந்த தகவல்கள் வெறும் வதந்திகள் அல்ல, அவை உண்மைதான், என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை.

என்னைச் சுற்றிலும் ஜேர்மன் ராணுவ தளவாடங்கள் சூழ்ந்திருப்பதை நான் கண்டேன் என்கிறார் அவர்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் புதிது புதிதாக பொருட்கள் கிடைக்கின்றன, திடீரென ஒரு பிரமாண்ட துப்பாக்கியின் பேரல் இருக்கிறது என, தனது பிரமிப்பை வெளிப்படுத்துகிறார் அவர்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் இரண்டாம் உலகப்போர்க்கால ஜேர்மானிய ஆயுதங்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதைக் காணலாம்.

Image: HISTORY HIT

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்