ஏழு வயது மகனை தந்தைக்கு தெரியாமல் ஐ.எஸ் அமைப்பில் சேர்த்த தாய்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தன் பிள்ளைகளை அவர்களது தந்தையின் ஒப்புதல் இல்லாமல் சிரியாவுக்கு அழைத்துச் சென்ற ஒரு தாய் தன் ஏழு வயது மகனை ஐ.எஸ் அமைப்பில் சேர்த்துள்ளார்.

ஜேர்மனியிலுள்ள Oberhausen என்ற இடத்தைச் சேர்ந்த Carla-Josephine (32) என்ற பெண், 2015ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் சிரியாவுக்கு சென்றுள்ளார்.

தனது மகனாகிய Hamzaவுக்கு 7 வயது இருக்கும்போது, அவனை ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக ராணுவ பயிற்சி முகாமிடம் ஒப்படைத்துள்ளார் Carla.

அத்துடன் பொது இடத்தில் கொல்லப்படுவர்களை பார்க்க தனது பிள்ளைகளை வற்புறுத்தியும் இருக்கிறார் Carla.

அவரும் Katiba Nusaiba என்ற பெண்கள் தீவிரவாத பிரிவில் சேர்ந்துள்ளார். ஜேர்மனியில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள Carlaவுக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் Stuttgart விமான நிலையம் வந்திறங்கிய Carla, உடனடியாக கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்பதால், வழக்கை பெடரல் அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்