ஜேர்மனி கடுமையாக பாதிக்கப்படும்... நாட்டு மக்களை எச்சரித்த சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

தற்போதைய சூழலில் ஜேர்மனி மக்கள் தொகையில் 70 சதவிகித மக்கள் கொடிய கொரோனா வியாதிக்கு இலக்காகலாம் என சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் சிறப்பு கூட்டம் ஒன்றில் எச்சரித்துள்ளார்.

சீனாவை அடுத்து கொரோனா வைரஸ் ஐரோப்பிய கண்டத்தை கடுமையாக பாதித்து வருகிறது.

இதுவரை ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 30 நாடுகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளது. சீனாவுக்கு வெளியே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஐரோப்பிய நாடான இத்தாலி உள்ளது.

மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் சுமார் 17,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். மேலும் 700 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்,

நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 58 மில்லியன் மக்கள் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலகாக வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் மொத்தமுள்ள 82.9 மில்லியன் மக்களில் இதுவரை 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 234 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 2 மட்டுமே மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்புன் கோர பிடியில் ஐரோப்பா சிக்குவதற்கு முன்பு தடுப்பூசி உருவாக்கப்படாவிட்டால் சேன்ஸலர் மெர்க்கல் தெரிவித்த புள்ளிவிவரங்கள் நிஜமாக மாறும் என சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட் அனைத்து பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடி,

ஒவ்வொரு நாளும் பொது போக்குவரத்தை கிருமி நீக்கம் செய்வதன் மூலம் நோய் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நோய் உள்ளூர் மக்களிடையே பரவாமல் இருக்க, வாகன ஓட்டிகளிடம் இருந்து திங்கள் முதல் மாதிரிகளை சேகரிக்க ஜேர்மனி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மட்டுமின்றி கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க ஜேர்மன் தலைநகரின் திரையரங்குகள், ஓபராக்கள் மற்றும் கச்சேரி இல்லங்களில் பெரிய கலாச்சார நிகழ்வுகள் நாளை முதல் ரத்து செய்யப்படும் என்று ஜேர்மன் அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இதனிடையே ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்த வாரம் 1,100 ஐத் தாண்டிய பின்னர்,

1,000 க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட நிகழ்வுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை கைவிடப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஸ்பான் பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...