எங்கள் நாட்டில் கொரோனா பரவ ஜேர்மனிதான் காரணமாக இருக்கும்: அதிரடியாக குற்றம் சாட்டியுள்ள நாடு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

எங்கள் நாட்டில் கொரோனா பரவ ஜேர்மனிதான் காரணமாக இருக்கும் என அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளது இத்தாலி.

இத்தாலியின் Lombardy நகரில் முதன்முறையாக பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி கொரோனா நுழைந்ததிலிருந்தே, அந்நாட்டு அறிவியலாளர்கள் தங்கள் நாட்டுக்குள் கொரோனாவைக் கொண்டுவந்த நபரை வலைவீசித் தேடத் தொடங்கினார்கள்.

ஆனால் அப்படி ஒருவரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அப்படியிருக்கும்போது, மிலனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர், இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் ஜீன் அமைப்பும், ஜனவரியில் ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் ஜீன் அமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஆகவே, இத்தாலிக்குள் கொரோனா வைரஸ் சீனாவுக்குள் இருந்து நேரடியாக நுழையவில்லை, அது ஜேர்மனி வழியாகத்தான் இத்தாலிக்குள் நுழைந்திருக்கமுடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

முனிச்சிலிருந்து இத்தாலிக்கு வந்த ஒருவர், அறிகுறிகள் தோன்றும் முன்னரே அப்பகுதியில் கொரோனாவை பரப்பியிருக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.

சீனாவுக்கு அடுத்து அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில், 12,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, 827 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

முதலில் Codogno என்ற பகுதியைச் சேர்ந்த Mattia என்பவருக்கு, சீனா சென்று வந்த ஒருவரிடமிருந்து கொரோனா பரவியதாக மருத்துவர்கள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், அந்த நபரை பரிசோதித்தபோது, அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்ததையடுத்து கொரோனாவை பரப்பியவரை தேடும் முயற்சி தொடர்ந்த நிலையில், தற்போது இந்த முடிவுக்கு இத்தாலி மருத்துவர்கள் வந்துள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...