பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற 5 நாடுகளின் எல்லையை மூடிய ஜேர்மனி: வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in ஜேர்மனி
624Shares

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐந்து நாடுகளுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் ஜேர்மனி அறிமுகபடுத்தியுள்ளது.

சீனாவில் பரவிய இந்த கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பிய நாடுகளை மிராட்டி வருகிறது. குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.

இதன் காரணமாக அந்நாட்டில் இருக்கும், பள்ளிகள், கடைகள் மூடப்பட்டுள்ளதுடன். மக்கள் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரு சில நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடி வருகின்றன.

அந்த வகையில் ஜேர்மனி இன்று (திங்கட்கிழமை ) காலை முதல் பிரான்ஸ், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுடன் எல்லைகளை மூடியுள்ளதாக, நேற்று(ஞாயிற்று கிழமை) நாட்டின் உள்துறை அமைச்சர் Horst Seehofer பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

மேலும், அவர் கொரோனா வைரஸின் பரவல் விரைவாகவும் ஆக்ரோஷமாகவும் முன்னேறி வருகிறது. மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று இந்த நோய் தொற்றுக்கான சங்கிலியை துண்டிக்க வேண்டும் என்பதற்காகவே எல்லை கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் திங்கள் காலை 8 மணிக்கு (மற்றும் டென்மார்க் எல்லையில் காலை 6 மணி முதல்) அமலுக்கு வரும். அதே சமயம் பொருட்கள் மற்றும் எல்லை தாண்டிய பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.

அதாவது, ஜேர்மன் குடிமக்கள் மற்றும் நாட்டில் தங்குவதற்கு குடியுரிமை பெற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதேனும் முக்கிய காரணம் இல்லாமல் வரும் மக்களுக்கும், அதே சமயம் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்கள் எல்லைகளை கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று Horst Seehofer தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த புதிய கட்டுப்பாடுகள் தற்காலிகமாக இருக்கும் அவ்வப்போது மறு ஆய்வு செய்யப்படும். கொரோனா வைரஸ் நெருக்கடியின் உச்சநிலை இன்னும் எட்டப்படவில்லை, சமூக தொடர்புகளைத் மக்கள் தவிர்க்குமாறு Horst Seehofer வலியுறுத்தியுள்ளார்.

ஜேர்மனியின் பொது சுகாதாரத்திற்குரிய பிரபலமான Robert Koch நிறுவனம், பிரான்ஸ் எல்லைப் பகுதியான

Alsace-Lorraine ஆபத்து நிறைந்த பகுதி என்று அறிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஜேர்மனி ஒன்றாகும். நாட்டில் இப்போது 5,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மன் நடவடிக்கைகள் தற்போது ஐந்து நாடுகளுக்கு பொருந்தும் அதே வேளையில், போலந்து மற்றும் செக் குடியரசு போன்ற பிற அண்டை நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடிவிட்டன, கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்