வெட்கமாக இல்லையா உங்களுக்கு?: கொரோனாவை மூடி மறைத்ததாக ஜேர்மனியை சாடும் இத்தாலி நாட்டவர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இத்தாலி நாட்டு பத்திரிகையாளர் ஒருவர், யூடியூபில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், கொரோனாவை மூடி மறைத்ததாக ஜேர்மனியை கடுமையாக சாடியுள்ளார்.

Mario Giordano என்ற அந்த பத்திரிகையாளர், ஜேர்மனி ஜனவரி இறுதியிலேயே கொரோனா குறித்து அறிந்திருந்ததாகவும், ஆனால் அது குறித்து யாரையும் எச்சரிக்காமல் அமைதியாக இருந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது வெட்கத்துக்குரிய விடயம், முறையற்ற நடத்தை என்கிறார் அவர். இப்போது எல்லோரும் இத்தாலியை கொள்ளை நோய் பிடித்த நாடு என்பது போல் பார்க்கிறார்கள்.

ஆனால், இப்போது பார்த்தால், கொரோனா ஜேர்மனியிலிருந்து வந்திருக்கிறதாக தெரிகிறது என்று கூறும் Giordano, அவர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது, ஆனால் அவர்கள் இதைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை என்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்