80 மீற்றர் நீளத்திற்கு ரயில் தண்டவாளத்தில் கழற்றி விடப்பட்டிருந்த ஸ்குரூ ஆணிகள்: நாசவேலை என்கிறார்கள் பொலிசார்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் அதிவேக ரயில்கள் செல்லும் ரயில் தண்டவாளத்தில், 80 மீற்றர் நீளத்திற்கு ஸ்குரூ ஆணிகள் கழற்றிவிடப்பட்டிருந்த நிலையில், அது நாசவேலையாக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

கொலோனுக்கும் ப்ராங்க்பர்ட்டுக்கும் இடையில் அதிவேக ரயில்கள் செல்லும் ரயில் பாதையில் இந்த பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாலையில் ப்ராங்பர்ட்டுக்கு வெளியே அமைந்துள்ள பாலம் ஒன்றைக் கடக்கும்போது, தண்டவாளத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்துள்ளார் அதிவேக ரயில் சாரதி ஒருவர்.

அப்போதுதான், ரயில் தண்டவாளத்தில், 80 மீற்றர் நீளத்திற்கு ஸ்குரூ ஆணிகள் கழற்றிவிடப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தார் அவர்.

ஸ்குரூ ஆணிகள் கழற்றிவிடப்பட்டதால் தண்டவாளம் சற்று விலகியிருக்க, அதன் மீது செல்லும் ரயில்கள் தடம் புரளவும், அந்த பகுதியில் ஒரு பாலம் உள்ளதால், பாலத்திலிருந்து சரிந்து கீழே விழவும் வாய்ப்பிருந்துள்ளது.

ஆனால், நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படும் முன் இந்த பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பிரச்சினைக்கு காரணமானவர்களை பொலிசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்