ஜேர்மனியில் அதிகவேக ரயில் தண்டவாளத்தில் போல்ட்டை கழற்றிவிட்டு நாசவேலை: சிக்கிய மர்ம நபர்

Report Print Basu in ஜேர்மனி

அதிவேக ரயில் பாதையில் போல்ட்டை கழற்றியதாகக் கூறி கொலை முயற்சி என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் பாலத்தைக் கடக்கும்போது தண்டவாளத்தில் அசாதாரணமான ஒன்றை ரயில் ஓட்டுநர் ஒருவர் கவனித்துள்ளார். சிக்கல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் பல ரயில்கள் ஏற்கனவே அந்த பகுதியை கடந்து சென்றன.

ரயில் ஆபரேட்டர் டாய்ச் பான் இந்த சம்பவத்தை ‘நாசவேலை’ என்று விவரித்தார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் 51 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் தான் கொலோன் மற்றும் பிராங்பேர்ட்டுக்கு இடையிலான பாலத்தில் 80 மீற்றர் ரயில் தண்டவாளத்தில் போல்ட்டை அகற்றியதாக கடுமையாக சந்தேகிக்கின்றோம்.

தாக்குதல் முயற்சி இல்லை என நிராகரிக்க முடியாது என்று கூறிய போதிலும், எதற்காக அந்த நபர் இச்செயலில் ஈடுபட்டார் என்ற நோக்கம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தண்டவாளங்கள் வழக்கத்தை விட ஐந்து சென்டிமீற்றர் தொலைவில் இருந்தன. இதனால் ரயில்கள் தடம் புரண்டிருக்கலாம், மேலும் அவை பாலத்திலிருந்து கீழே விழுந்துவிடும்.

எந்தவொரு ரயில்களுக்கும் அல்லது பயணிகளுக்கும் எந்தத் தீங்கும் வரவில்லை என்பது அதிர்ஷ்டம் என்று பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்