கையில் கட்டுக்கட்டாக பணத்துடன் அலையும் ஜேர்மானியர்கள் வாழ்வில் கொரோனா ஏற்படுத்தியுள்ள மாற்றம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சூட்கேஸ்களில் கட்டுக்கட்டாக பணத்துடன் அலையும் ஜேர்மானியர்களை, பணத்துக்கு பதில் கிரெடிட் கார்டுகளை சுமக்கவைத்துவிட்டது கொரோனா.

தற்போது ஜேர்மனியில் பாதிக்கும் மேல் கட்டணம் செலுத்துதல் கிரெடிட், டெபிட் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் Contactless payments வாயிலாக நடப்பதாக ஜேர்மன் கிரெடிட் ஏஜன்சி தெரிவித்துள்ளது.

இது கொரோனா அச்சம் ஏற்படுவதற்கு முன்பிருந்ததைவிட 35 சதவிகிதம் அதிகமாகும். இவ்வகை கட்டணம் செலுத்துவதற்கு இயந்திரங்களுக்குள் மக்கள் தங்கள் கிரெடி,

டெபிட் கார்டுகளை செருக வேண்டியதில்லை. அவற்றை இயந்திரத்தின் அருகில் காட்டினாலே போதும்.

அத்துடன், ஜேர்மனியில் 25 யூரோக்களுக்கு அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிவந்தால் மட்டுமே PIN எண்ணை பதிவு செய்யவேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனா பரவும் அபாயம் குறையும் என்கிறார் ஜேர்மன் சேமிப்பு வங்கி கூட்டமைப்பின் தலைவரான Helmut Schleweis.

ஜேர்மானியர்கள் என்ன வாங்கச் சென்றாலும், கையில் பணத்தை கொண்டு சென்று ரொக்கமாக கொடுத்தே பழகியவர்கள்.

2019இல்தான் முதல் முதலில் அதிகம்பேர் ரொக்கத்தைவிட கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தினர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...