கொரோனா பரவும் நேரத்தில் ஆறு மில்லியன் மாஸ்குகளை பறிகொடுத்த ஜேர்மனி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
1047Shares

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், ஜேர்மனி ஆறு மில்லியன் மாஸ்குகளை பறிகொடுத்துள்ளது.

ஆர்டர் செய்யப்பட்டிருந்த ஆறு மில்லியன் மாஸ்குகள் ஜேர்மனிக்கு வந்து சேர வேண்டிய நேரத்தில், அவை வந்து சேராமல் வரும் வழியிலேயே மாயமாகியுள்ளன.

Der Spiegel என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கென்ய விமான நிலையத்தில் அந்த ஆறு மில்லியன் மாஸ்குகளும் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ராணுவ மின்னஞ்சல் ஒன்றும் மாஸ்குகள் காணமல் போன விடயத்தை உறுதிசெய்துள்ளது.

அவை எப்படி கென்யாவில் மாயமாகின என்பது குறித்த தகவலை பெடரல் பாதுகாப்புத் துறை அமைச்சர் Annegret Kramp-Karrenbauer உறுதிசெய்யவில்லை.

ஆனால், மாஸ்குகள் காணாமல் போனது உண்மைதான் என்றும், அதே நேரத்தில், ஜேர்மனிக்கு மாஸ்குகள் பத்திரமாக வந்து சேர்ந்தால்தான் அவற்றிற்கான தொகை செலுத்தப்படும் என ஒப்பந்தம் போட்டிருந்ததால், நிதி இழப்பு ஒன்றும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

PHOTOGRAPH: GETTY IMAGES

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்