கொரோனாவால் ஜேர்மனி சீரழிகிறது... தற்கொலை செய்து கொண்ட அமைச்சர்: தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியின் ஹெஸ்ஸி பிராந்திய நிதியமைச்சர், கொரோனாவால் நாடு சீரழிவதை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹெஸ்ஸி பிராந்திய நிதியமைச்சரான 54 வயது Thomas Schaefer என்பவரே கொரோனாவால் நாடு சீரழிவதை பொறுக்க முடியாமல், ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர்.

சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் Christian Democratic Union கட்சி உறுப்பினரான தாமஸின் உடல் பிராங்பேர்ட்டுக்கு அருகிலுள்ள Hochheim பகுதி ரயில் தண்டவாளத்தில் இருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நிதியமைச்சர் தாமஸ் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் கொரோனாவால் சீரழிவதாக அமைச்சர் தாமஸ் கவலையிலும் மன உளைச்சலிலும் இருந்துள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு செல்வார் என தாம் ஒருபோதும் எண்ணியதில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஹெஸ்ஸி பிராந்தியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிதியமைச்சராக பணியாற்றி வந்தவர் Thomas Schaefer என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்