சொந்த வீட்டிலிருப்பதே பாதுகாப்பல்ல: கொரோனா தனிமைப்படுத்தலால் ஜேர்மனியில் அதிகரித்துவரும் குடும்ப வன்முறைகள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகள் மக்களை வீடுகளுக்குள் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ள நிலையில், ஜேர்மனியைப் பொருத்தவரையில் வீட்டிலிருப்பது பாதுகாப்பல்ல என்னும் சூழல் உருவாகியுள்ளது.

மக்கள் வீடுகளுக்குள் சேர்ந்து இருப்பதால் குடும்ப வன்முறை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கிய நாள் முதலே, பெர்லினிலிருந்து பாரீஸ் வரை குடும்ப வன்முறை அதிகரிக்கும் சூழல் உள்ளதாக குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோருக்கு உதவும் அமைப்புகள் எச்சரித்துள்ளன.

பலருக்கு அவர்கள் வீட்டில் இருப்பது பாதுகாப்பானதல்ல என்கிறது, ஜேர்மன் பெண்கள் உதவி மற்றும் ஆலோசனை மையங்கள் கூட்டமைப்பு.

கொரோனாவால் வீடுகளுக்குள் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம், டென்ஷனை அதிகரித்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான குடும்ப மற்றும் பாலியல் வன்முறையை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

இந்த நிலை ஜேர்மனியில் மட்டுமல்ல! சீனாவிலும் பெண்களுக்கெதிரான வன்முறை, வீடுகளில் அடைந்திருக்கும் காலகட்டத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்பெயினில் தனது இரண்டு குழந்தைகளின் தாயாகிய 35 வயது பெண் ஒருவரை, அவரது கணவர் கடந்த வாரம் கொலை செய்துள்ளார்.

சில நாட்களுக்குள்ளேயே இந்த நிலை என்றால், வீடுகளுக்குள் அடைந்து கிடப்பது இன்னமும் பல மாதங்களுக்கு தொடர்ந்தால், எந்த அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கப்போகிறதோ தெரியவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்