கொஞ்சம் கடந்த காலத்தை எண்ணிப்பார்த்து எங்களுக்கு உதவுங்கள்: ஜேர்மனியிடம் உதவி கோரும் இத்தாலி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

யுத்தத்துக்குப்பின் உங்களுக்கு மற்ற நாடுகள் உதவியதை கொஞ்சம் நினைத்துப்பார்த்து, எங்களுக்கு கொஞ்சம் உதவுங்கள் என ஜேர்மனியிடம் கோரிக்கை வைத்துள்ளது இத்தாலி!

ஜேர்மன் நாளிதழ் ஒன்றில் கடிதம் ஒன்றை பிரசுரித்துள்ள இத்தாலிய கவர்னர்களும் மேயர்களும், கொரோனாவால் தங்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு உதவ ஜேர்மனியை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் பிற நாடுகள் ஜேர்மனியின் கடனை தள்ளுபடி செய்ய ஒப்புக்கொண்டதை கொஞ்சம் நினைத்துப்பார்க்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

திங்கட்கிழமை நிலவரப்படி 100,000 பேருக்கும் அதிகமானோர் இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதோடு, 11,591 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி பிற நாடுகளின் உதவியை நாடவேண்டிய சூழலுக்கு ஆளாகிவிட்டது.

ஆகவே ஜேர்மன் நாளிதழிலேயே ஒரு பக்கத்தை தங்களுக்கென்று வாங்கி, அந்த நாளிதழில் ’அருமையான ஜேர்மன் நண்பர்களே, பழைய கால நினைவுகளை கொஞ்சம் திருப்பிப்பார்ப்பது நல்லது’ என்று எழுதியுள்ளார்கள், இத்தாலிய கவர்னர்களும் மேயர்களும்.

1953ஆம் ஆண்டு, போருக்குப்பின் கடனில் தவித்த ஜேர்மனியின் கடன்களை குறைக்க ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டதை மேற்கோள் காட்டி இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நீங்கள் கஷ்டத்திலிருக்கும்போது மற்ற நாடுகள் உங்களுக்கு உதவின, அதை சற்று எண்ணிப்பார்த்து எங்களுக்கு உதவுங்கள், என்பது இத்தாலி ஜேர்மனிக்கு எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம் ஆகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்