கொரோனா அச்சுறுத்தல்.... ஒரே நாளில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஜேர்மனி

Report Print Arbin Arbin in ஜேர்மனி

எஞ்சிய ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் ஜேர்மனியில் கொரோனா பாதிப்பு மிக மிக குறைவாக கண்டுவந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 149 பேர் மரணமடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து கொரோனாவால் ஜேர்மனியில் மொத்தம் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 583 ல் இருந்து 732 என அதிகரித்துள்ளது.

மட்டுமின்றி ஒரே நாளில் சுமார் 5,453 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,366 என பதிவாகியுள்ளது.

இத்தாலியின் அருகாமையில் உள்ள மாநிலங்களான பவேரியா மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் ஆகிய இரண்டிலும் இதுவரை மொத்தம் 422 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

தலைநகர் பெர்லினில் மட்டும் 2,754 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். 16 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

இதனிடையே Wolfsburg பகுதியில் உள்ள முதியவர்கள் காப்பகம் ஒன்றில் 17 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த தகவலும் சமீபத்தில் வெளியானது.

மேலும் இப்பகுதியில் உள்ள சரிபாதி முதியோர் காப்பகங்களில் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் கொரோனா இழப்பு குறைவாக காணப்படுவதின் முக்கிய காரணியாக கூறப்படுவது தீவிரமான சோதனை நடவடிக்கைகளே.

லேசான அறிகுறிகளுடன் காணப்பட்டாலும், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. மட்டுமின்றி அண்டை நாடுகளைவிடவும் அதிகமாக தீவிர சிகிச்சை பிரிவுகள் ஜேர்மனியில் அமைந்துள்ளதும் அந்த நாட்டுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்