ஜேர்மனியில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரைவிட குணமடைந்துள்ளவர்கள் அதிகம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கையைவிட, கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முதல்முறையாக, தினமும் புதிதாக கொரோனா தாக்குதலுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கையை குணமடைவோரின் எண்ணிக்கை தாண்டியுள்ளது. நாடு முடக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவாக இது பார்க்கப்படுகிறது.

ஜேர்மனியில் 24 மணி நேரத்தில் 7,381 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் அதே காலகட்டத்தில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,252தான்.

நாடு முடக்கப்பட்டு சமூக விலகலை கடைப்பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனளிப்பது போள் தெரிகிறது என்கிறார் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான Annegret Kramp-Karrenbauer.

அது உண்மையென நிரூபிக்கப்படும் பட்சத்தில், எப்படி சாதாரண வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவது என்பது குறித்து சிந்திக்கத் துவங்கலாம் என்றார் அவர்.

கடந்த மாதம் கடுமையான சமூக விலகல் கட்டுப்பாடுகளை விதித்த ஜேர்மனி, அவற்றை ஏப்ரல் 19 வரை நீட்டித்துள்ளது.

இத்ற்கிடையில், கொரோனா பரவுவதைக் குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும் நிலையில், கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வது குறித்து முடிவெடுக்க இன்னும் கொஞ்ச காலம் தேவை என்று கூறியுள்ளார் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்