வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் காலம் நெருங்கி வருகிறது: ஜேர்மன் அலுவலர் தகவல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மானியர்கள் இந்த கோடை விடுமுறையை ஒரு வேளை வெளிநாடுகளில் செலவிடலாம் என்றுகூறியுள்ளார் ஜேர்மன் சுற்றுலாத்துறை ஆணையர்.

பெடரல் சுற்றுலாத்துறை ஆணையரான Thomas Bareiss, கொரோனா தொடர்ந்து கட்டுப்பட்டு இருக்கும் நிலையில், மக்கள் வெளிநாடுகளுக்கு விடுமுறையை செலவிடச் செல்ல வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

ஜேர்மனி, கோடை விடுமுறை தொடர்பாக மற்ற நாடுகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திவருவதாக தெரிவித்துள்ளார் அவர்.

ஐரோப்பிய நாடுகள் வரும் கோடை விடுமுறையை எப்படி கையாள்வது என்பது குறித்த ஆழ்ந்த யோசனையில் உள்ளன.

ஐரோப்பாவில், கொரோனா 100,000க்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கிவிட்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் கோடை விடுமுறை குறித்து பேசிய ஜேர்மன் சுற்றுலாத்துறை ஆணையரான Bareiss, கொரோனா தொடர்பில் பெருமளவில் நிலையில்லாத்தன்மையே நிலவுவதால், தானேஇதுவரை விடுமுறைக்காக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

கொரோனா கட்டுப்பட்டே இருக்கும் நிலையில், அடுத்த நான்கு முதல் எட்டு வாரங்களில் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த முடியும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

அப்படி வெளிநாட்டு சுற்றுலா அனுமதிக்கப்படும் பட்சத்தில், எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம் என்பது குறித்துக் கேட்ட போது, குறிப்பாக காரிலேயே செல்லக்கூடிய பக்கத்து நாடுகளான ஆஸ்திரியா, பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அனுமதியளிக்கப்படலாம் என்றார் அவர்.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்புதான் ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான HeikoMaas, மக்கள் வழக்கமாக கடற்கரைகளிலும், மலைகளிலும் கூட்டம் கூட்டமாக விடுமுறையை செலவிடுவதுபோல் இம்முறை செலவிட முடியாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்