கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல்... பெர்லின் வெளியிட்டுள்ள கால அட்டவணை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் தலைநகரமான பெர்லின், கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படுவது தொடர்பான திகதிகளை வெளியிட்டுள்ளது.

மே 9

இந்த சனிக்கிழமை (மே மாதம் 9ஆம் திகதி) முதல், சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன் அனைத்து கடைகளும் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.

மே 11

மே மாதம் 11ஆம் திகதி முதல், அழகு நிலையங்கள் முதலானவை இயங்கலாம். முடி திருத்தும் நிலையங்கள் ஏற்கனவே மே 4 அன்றே திறக்கப்பட்டுவிட்டன.

மே 11இலிருந்து கூடுதல் மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம்.

இசைப் பள்ளிகளும், இளைஞர்களுக்கான கலை பள்ளிகளும் திறக்கப்படலாம். ஆனால், தியேட்டர்கள் மற்றும் concert அரங்குகளுக்கு இயங்க அனுமதி இல்லை.

மே 15

மே 15 முதல், உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகள் மீண்டும் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

உணவகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உணவு பரிமாறப்படலாம், ஆனால் சமூக விலகல் கட்டுப்பாடுகளுடன்!

மதுபான விடுதிகள் மற்றும் கிளப்கள் போன்றவற்றிற்கு இப்போது இயங்க அனுமதியில்லை. அத்துடன், மே 15இலிருந்து, விளையாட்டு கிளப்கள் இயங்கலாம், வெளி மைதானங்களுக்கு மட்டுமே அனுமதி, குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே கூடலாம்.

திறந்த வெளி நீச்சல் குளங்களுக்கும் இயங்க அனுமதியளிக்கப்பட உள்ளது, ஆனால், அதற்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

உடற்பயிற்சி மையங்கள் இப்போதைக்கு மூடப்பட்டிருக்கும்.

மே 25

மக்கள் வந்து தங்கும் ஹொட்டல்கள், மே 25 முதல் வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ள இருக்கின்றன.

ஆனால், சமூக விலகல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் அவசியம். சர்வதேச சுற்றுலா ஸ்தம்பித்துப்போனதால், உள்ளூர் சுற்றுலா வரும் நாட்களில் முக்கியப் பங்காற்ற இருக்கிறது.

இருந்தாலும், மீண்டும் கொரோனா பரவுவது அதிகரிக்கும்பட்சத்தில், மீண்டும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்