ஜேர்மன் ஹொட்டலில் 20 அழகிகளுடன் ஊரடங்கை செலவிடும் தாய்லாந்து மன்னர்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

உலகமே கொரோனாவைக் கண்டு நடுங்கிப்போயிருக்கும் நிலையில், தாய்லாந்து மன்னர் தாமும் தன்னை ஜேர்மன் ஹொட்டல் ஒன்றில் முடக்கிக்கொண்டுள்ளார்... ஆனால் தனியாக அல்ல, 20 அழகிகளுடன்!

விருப்பப்பட்ட பெண்களையெல்லாம் மனைவியாகவும் காதலியாகவும் வைத்துக்கொள்ளும் குணம் கொண்ட தாய்லாந்து மன்னர், ஊரடங்கை செலவிடுவதற்காக ஜேர்மன் ஹொட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.

தாய்லாந்து மன்னாராக இருந்தாலும், பெரும்பாலான நேரத்தை வெளிநாடுகளிலேயே செலவிடுபவரான Maha Vajiralongkorn (67), கொஞ்ச நாட்கள் தாய்லாந்தில் செலவிட்டபின் மீண்டும் ஜேர்மனிக்கு திரும்பியுள்ளார்.

அவர் அங்குள்ள ஹொட்டல் ஒன்றின் நான்காவது தளம் முழுவதையுமே தனக்காக முன்பதிவு செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் சிறப்புப்படை போன்று சீருடை அணிந்த, ஒரு கூட்டம் ’பாலியல் வீரர்கள்’ அவருடன் இருக்கிறார்களாம்.

அத்துடன் அந்த ஹொட்டலில் மன்னரும் அழகிகளும் தனித்திருக்கும் உல்லாச அறை ஒன்றும் உள்ளதாம்.

இதில், மன்னருடன் நேரம் செலவிட பெண்கள் போட்டி போடுவதுண்டாம். ஏனென்றால், அதற்காக அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும்தொகை அளிக்கப்படுமாம்.

அதே நேரத்தில், விருப்பமே இல்லாமல் மன்னரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் இளம்பெண்களும் இருக்கிறார்களாம்.

அப்படி அவர்கள் மன்னரின் விருப்பத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால், அவர்களுக்கு நேரிடும் பின் விளைவுகளுக்கு அஞ்சி, அவர்கள் வேறு வழியின்றி இதை செய்கிறார்களாம்.

இதற்கிடையில், ஜேர்மனியில் கொட்டமடிக்கும் மன்னரின் காதல் சேட்டைகளைக் குறித்து சமூக ஊடகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, ’நமக்கு எதற்காக ஒரு மன்னர்?’ என்ற ஹேஷ்டேக் தாய்லாந்தில் பிரபலமானது நினைவிருக்கலாம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்