கட்டுப்பாடுகளை நீக்கி எல்லைகளை திறந்த ஜேர்மனி: ஆனால் ஒரே ஒரு நிபந்தனை!

Report Print Arbin Arbin in ஜேர்மனி

அன்னையர் தினத்தை முன்னிட்டு கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி எல்லைகளை திறந்துள்ள ஜேர்மனி ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் முன்வைத்துள்ளது.

ஜேர்மனியில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அண்டை நாடுகளுடனான தமது எல்லைகளை மூடி கடும் கட்டுப்படுகளை விதித்திருந்தது அரசாங்கம்.

இந்த நிலையில் இன்று அன்னையர் தினம் என்பதால் ஒரு நாள் மட்டும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியுள்ள ஜேர்மனி, எல்லைகளை திறந்துள்ளது.

ஆனால் இந்த கட்டுப்பாடு தளர்வானது இன்று ஒரு நாள் மட்டும் அமுலில் இருக்கும் எனவும், ஜேர்மனிக்குள் நுழைபவர்கள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதுவும் தாயாரை சந்திக்கும் நோக்கில் ஜேர்மனிக்குள் நுழைபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த பல வாரங்களாக, முக்கியமான காரணத்தைக் கொண்டவர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய முடியும்.

குறிப்பாக லொறி சாரதிகள், மருத்துவ சேவையில் ஈடுபடுபவர்கள் மற்றும் எல்லைப் பகுதியைச் சேர்ந்த பயணிகள்.

இருப்பினும் நுழைவு கட்டுப்பாட்டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் நம்பகமானதாகவும் சரிபார்க்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இதனிடையே, தற்போது ஜேர்மனியில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக கூறும் சில அரசியல் தலைவர்கள் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்