கட்டுக்குள் வந்துவிட்டதாக எண்ணி தளர்த்தப்பட்ட முடக்க நிலை! ஜேர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Report Print Abisha in ஜேர்மனி

ஜேர்மனியில், முடக்க நிலை தளர்த்தப்பட்ட சில நாட்களே கடந்துள்ள நிலையில், கட்டுக்குள் இருந்ததாக நம்பப்பட்ட நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.

ஜேர்மனியில், கொரோனா தொற்று தாக்கம் குறைந்துவிட்டதாக முடக்க நிலையை தளர்த்த கோரி கடந்த வாரம் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

எனவே ஜேர்மனியின் 16 மாகாண தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு நாடு முழுவதும் விரிவான முடக்க நிலை தளர்வுகள் குறித்த அறிவிப்பை அந்த நாட்டின் சேன்ஸலர் ஏஞ்சால மெர்கல் வெளியிட்டார்.

இதன்படி ஜேர்மனி முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், கல்வி நிறுவனங்களின் செயல்படவும் அனுமதிக்கப்பட்டது. மேலும், ஜேர்மனியின் பிரபல கால்பந்து தொடர் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராபர்ட் கோச் இன்ஸ்டியூட்டின் தகவல்படி, கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நபரின் மூலம் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது, கொரோனா மீண்டும் பரவ துவங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில், 171,879 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 7,569 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்