ஜேர்மனி முழுவதும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம்! அம்பலப்படுத்திய ஆய்வு

Report Print Basu in ஜேர்மனி

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக ஜேர்மன் தொழிலாளர்கள் பரவலான பணிநீக்கங்களை எதிர்கொள்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கொரோனாவால் 7,569 பேர் பலியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் 1,71,879 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.

கொரோனாவால் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியுள்ளது ஜேர்மனி.

இந்நிலையில், ஜேர்மன் பொருளாதார ஆராய்ச்சிக்கான நிறுவனம் வெளியிட்ட ஆய்வில், நாட்டின் பொருளாதாரம் முழுவதும் பரவலான பணிநீக்கங்கள் நடைபெற்று வருவதாகக் கண்டறியப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில், கேட்டரிங் துறையில் 58%; 50% ஹோட்டல்கள், பயண முகவர் நிலையங்களில் 43%; மற்றும் 39% வாகன நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தன அல்லது தற்காலிக ஒப்பந்தங்களை நீட்டிக்கவில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வேறு பல துறைகளிலும் சராசரி பணிநீக்கங்கள் செய்யப்படுகின்றன, ஆனால் மருந்துவ துறையில் பணிநீக்கம் எதுவும் இல்லை என்று பொருளாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்