கொரோனா கட்டுப்பாடு எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரவாதத்துக்கு வழிவகுக்கலாம்: ஜேர்மனி அச்சம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மனியில் மக்கள் பேரணிகளில் ஈடுபட்ட நிலையில், இந்த எதிர்ப்புகள் தீவிரவாதத்துக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் பெர்லின், ஃப்ராங்க்பர்ட், டோர்ட்மண்ட் மற்றும் பல ஜேர்மன் நகரங்களில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணிகள் நடத்தப்பட்டன.

Stuttgartஇல் சுமார் 10,000 பேரும், முனிச்சில் சுமார் 3,000 பேரும் பேரணிகளில் கலந்துகொண்டனர்.

தங்கள் சுதந்திரம் பறிக்கப்படுவதாகக் கூறி மக்கள் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படக் கோரி பேரணிகள் நடத்தினார்கள்.

ஆனால், சில இடங்களில் வலது சாரி தீவிரவாதக் கருத்துக்கள் கொண்டவர்கள் பேரணிகளுக்குள் நுழைந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.

சொல்லப்போனால், சனிக்கிழமை சில வலது சாரியினர் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதலும் நடத்தினார்கள்.

ஆகவே, இந்த கொரோனா கட்டுப்பாடுகள் எதிர்ப்பு பேரணிகள் தீவிரவாதத்திற்கு வழி வகை செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்