36 முறை... சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கிய ஜேர்மன் ராணுவ வீரர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் இளம் ராணுவ வீரர் ஒருவர் 4 சிறார்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய விவகாரத்தில் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார்.

மேற்கு ஜேர்மன் நகரமான Bergisch Gladbach-ல் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பான இரண்டாவது நாடு தழுவிய விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 27 வயது ராணுவ வீரர் 4 சிறார்களை மொத்தம் 36 முறை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி இருமுறை தமது நண்பருடன் இணைந்தும் சிறார்களை துன்புறுத்தியுள்ளார். குறித்த நபர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையின்போது குறித்த ராணுவ வீரர் பொது மக்களுக்கு ஆபத்தானவர் என்று அரசு தரப்பு வழக்குரைஞர் குற்றச்சாட்டில் கூறினார்.

தற்போது விசாரணையை எதிர்கொள்ளும் ராணுவ வீரர் தமது வளர்ப்பு மகன் மற்றும் மகளையே துன்புறுத்தலுக்கு இரையாக்கியுள்ளார்.

மனைவி வேலைக்கு செல்லும் வேளையில் இவர் தமது இணையதள நண்பருடன் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், தமது நண்பரின் மகளையும் இவர்கள் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த விசாரணையானது நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் விரிவு படுத்தியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்