ஜேர்மனியின் நிலை குறித்து நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் விகிதம் 1-க்குக் கீழே குறைந்துவிட்டது என்று நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் இன்று தெரிவித்துள்ளது.

நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் விகிதத்தை குறிக்கும் R0 என அழைக்கப்படும் எண் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு 1-க்கு மேல் இருந்தது.

இது நாட்டில் நோய் குறைந்ததை விட விரிவடைந்து இருக்கலாம் என்ற அறிகுறிகளை காட்டும் வகையில் இருந்தது.

இந்நிலையில், கடந்த வாரங்களில் நாம் கண்ட புதிய தொற்றுநோய்களின் அதிகரிப்பு குறைவானது மற்றும் இது அதிகரிக்காமல், குறையாமல் ஒரே நிலையில் இருக்கக்கூடும் என்று ராபர்ட் கோச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான கட்டுப்பாடுகளை நாடு தளர்த்துவதால், இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் ஓய்வூதிய இல்லங்களில் பல பெரிய அளவிலான பாதிப்புகளை ஜேர்மனி தொடர்ந்து கையாண்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 798 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 101 இறப்புகள் ஏற்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்