எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது ஜேர்மனி

Report Print Fathima Fathima in ஜேர்மனி

ஜேர்மனியில் நாளை மறுதினம் முதல் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனாவால் 174K மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 149K பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவலின் முதல் கட்டத்தை கடந்து விட்டதால் அடுத்து சில நாட்களில் கடைகள், பள்ளிகள், உணவகங்கள், விடுதிகள் போன்றவற்றை திறக்க திட்டமிட்டுள்ளதாக சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்தார்.

கொரோனாவால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் அதை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தரப்பில், கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்துவருவதால் வருகிற 16ம் திகதி முதல் எல்லைக்கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது, ஐரோப்பிய நாடுகளுக்காக பயணம் அடுத்த மாதம் முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்