ஜேர்மனியின் நிலை குறித்து நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட முக்கிய நற்செய்தி

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் விகிதம் 0.75 ஆக குறைந்துள்ளது என நாட்டின் நோய் மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இது சிறியதாக இருந்தாலும் ஆனால் நம்பிக்கையான குறைவு. இது முன்பு 0.81 ஆக இருந்தது என்று ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் விகிதம், R-value என்றும் அழைக்கப்படுகிறது, இது வைரஸ் எவ்வளவு பரவுகிறது என்பதைக் குறிக்கிறது.

R-value 1 என்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் அதை மற்றொரு நபருக்கு பரப்ப முடியும் என்பதாகும்.

இந்த எண்ணிக்கை 1 க்கு மேல் உயர்ந்தால், நாட்டின் சுகாதார அமைப்பு இறுதியில் நிலை குலைந்து விடும் என்று ஜேர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் பலமுறை எச்சரித்துள்ளார்.

நோய் பரவியதில் இருந்து ஜேர்மனியில் மொத்தம் 3.1 மில்லியன் கொரோனா வைரஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, நாட்டில் 1,74,478 வழக்குகள் மற்றும் 7,884 இறப்புகள் பதிவாகியுள்ளன. குறைந்தது 1,51,700 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்