ஜேர்மனியை பொருளாதார மந்த நிலைக்கு தள்ளும் கொரோனா!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கொரோனா ஜேர்மனியை பொருளாதார மந்த நிலையை நோக்கி தள்ளியுள்ளது. ஜேர்மனியின் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2.2 சதவிகிதம் சுருங்கியுள்ளதாக ஜேர்மனியின் பெடரல் புள்ளியியல் ஏஜன்சி தெரிவித்துள்ளது.

2009 உலக பொருளாதார பிரச்சினைக்குப்பிறகு இப்போதுதான் இவ்வளவு மோசமான நிலையை ஜேர்மனி அடைந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

அதாவது, ஜேர்மனி அண்டை நாடுகளான இத்தாலி மற்றும் பிரான்சுடன் இணைந்து பொருளாதார மந்த நிலைக்குள் செல்கிறது.

ஏற்கனவே 2019ஆம் ஆண்டின் இறுதிக்காலாண்டில் ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு தயாரிப்பு 0.1 சதவிகிதம் குறைந்ததாக புள்ளியியல் ஏஜன்சி தெரிவித்திருந்தது.

அப்படி பார்த்தால், ஜேர்மனி தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு காலாண்டுகளில் வீழ்ச்சியடைந்து பொருளாதார மந்த நிலைக்கு சென்றுள்ளது எனலாம்.

இதற்கிடையில், இரண்டாவது காலாண்டில்தான் கொரோனா கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட தாக்கம் மிகச் சரியாக உணரப்படும் என்று கூறியுள்ள பொருளாதார நிபுணர்கள், இனி இதைவிட மோசமான நிலைமை ஏற்பட இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்