ஜேர்மனியில் பிரித்தானிய பட்டத்து இளவரசர்களில் ஒருவரான இளவரசர் ஓட்டோ சாலை விபத்தில் பலி: அனாதையான 4 பிள்ளைகள்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

பிரபல தொழிலதிபரும் பிரித்தானிய பட்டத்து இளவரசர் வரிசையில் ஒருவருமான ஜேர்மன் இளவரசர் ஓட்டோ மிக மோசமான சாலை விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

நான்கு பிள்ளைகளுக்கு தந்தையும் பிரித்தானிய பட்டத்து இளவரசர்கள் வரிசையில் ஒருவருமான Otto of Hesse என்ற ஜேர்மானிய இளவரசர் சாலை விபத்தில் சிக்கி சம்பவயிடத்தில் பலியாகியுள்ளார்.

ஜேர்மனியில் McDonald உணவகங்களை முன்னெடுத்து நடத்திவரும் இளவரசர் ஓட்டோ, கடந்த 17 ஆம் திகதி பவேரியா மாநிலத்தில் அமைந்துள்ள லிண்டாவு மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரி பகுதியில் மிக மோசமான விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

55 வயதான இளவரசர் ஓட்டோ பயணித்த டுகாட்டி மோட்டார் பைக்கானது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலை தடுப்பு வேலியில் மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த இளவரசர் ஓட்டோ சம்பவயிடத்தில் பலியாகியுள்ளார். மோட்டார் பைக் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களில் அதிக நாட்டம் கொண்ட இளவரசர் ஓட்டோ, வேகப்பிரியர் எனவும், கடந்த 2010 ஆம் ஆண்டு இதன் காரணமாக சட்டச் சிக்கலை எதிர்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

பிரஸ்ஸியாவின் மன்னர் மூன்றாம் ஃபிரடெரிக் வில்லியம்-ன் பரம்பரையை சேர்ந்த இளவரசர் ஓட்டோ 1998 ஆம் ஆண்டு Carla Blickhaauser என்பவரை லாஸ் வேகஸ் நகரில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு இளவரசர் மேக்ஸ்(21), இளவரசி எலெனா(20), இளவரசர் மோரிட்ஸ்(13), மற்றும் இளவரசர் லியோபோல்ட்(11) ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து பெற்றுள்ள நிலையில், தற்போது இளவரசர் ஓட்டோவின் நான்கு பிள்ளைகளும் அனாதையாகியுள்ளனர்.

அரச மரபியலாளர் டேனியல் வில்லிஸின் கூற்றுப்படி, பிரித்தானிய பட்டத்து இளவரசர்கள் வரிசையில் 1,461 ஆம் இடத்தில் இளவரசர் ஓட்டோ இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்