கழிவறைக்குள் தவறி விழுந்த திருமண மோதிரம்: 80 ஆண்டுகளுக்குப் பின் எப்படி கிடைத்தது தெரியுமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பெண் ஒருவரின் திருமண மோதிரம் கை கழுவும்போது தவறி கழிவறைக்குள் விழுந்திருக்கிறது. இது நடந்தது 1940ஆம் ஆண்டு!

Margarete Herzog, என்ற அந்த பெண் தனது திருமண மோதிரம் தவறி கழிவறைக்குள் விழுந்துவிட்டதை தனது மகளான Sonja Güldnerஇடம் கூறி கவலைப் பட்டிருக்கிறார்.

1996இல் தனது 87ஆவது வயதில் இறந்துபோனார் Margarete. இந்நிலையில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பொருட்களை தேடுவதை பொழுதுபோக்காகக் கொண்ட சிலர் அந்த மோதிரத்தை Beelitz என்ற நகரத்தில் உள்ள பழத்தோட்டம் ஒன்றில் கண்டுபிடித்துள்ளார்கள்.

அந்த திருமண மோதிரத்தில் ’H.H.’ என்ற எழுத்துக்களும் ‘30.03.1940’ என்ற திகதியும் பொறிக்கப்பட்டிருந்திருக்கிறது.

அது யாருடையது என்பதை அறிவதற்காக திருமண பதிவு அலுவலகத்தில் விசாரித்துள்ளார்கள் அதைக் கண்டுபிடித்தவர்கள்.

அந்த மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்த திகதியின் அடிப்படையில், 1940 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், 30 ஆம் திகதி திருமணம் செய்துகொண்ட ஒரே ஜோடி Hans Herzog மற்றும் Margarete Fechner என்பது தெரியவரவே, அந்த மோதிரம் Margareteஇன் மகளான Sonja Güldnerஇடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

80 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது தாயின் மோதிரம் தனக்கு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார் Sonja.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்