ஜேர்மனியில் உரக் கிடங்கில் தள்ளி மனைவியை கொலை செய்த விவசாயி: அவர் சொன்ன காரணம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் விவசாயி ஒருவர் தனது மனைவியை உரக் கிடங்கில் தள்ளி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தமது சொந்த பண்ணையில் குறித்த விவசாயி இந்த கொடுஞ்செயலை செய்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபணமானதை அடுத்து, அந்த விவசாயிக்கு 13 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவசாயியின் மனைவி அந்த உரக் கிடங்கில் தவறி விழுந்ததாகவும், காப்பாற்ற எவரும் இல்லாத நிலையில், அவர் பரிதாபமாக மரணமடைந்ததாகவும் நீதிமன்றத்தில் விவசாயி தரப்பு முன்வைத்த வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

51 வயதான அந்தப் பெண் வன்முறைக் குற்றத்திற்கு பலியானார் என்று பவேரிய நகர நீதிபதிகள் தெரிவித்தனர்,

ஆனால் பிரதிவாதியின் வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்வதாகக் கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு மட்டும் ஜேர்மனியில் கணவர் அல்லது முன்னாள் கணவரால் 123 பெண்கள் வன்முறைக் குற்றத்திற்கு இலக்காகியுள்ளனர்.

கடந்த மே மாதம் மனைவி மற்றும் மகனை கொலை செய்த குற்றத்திற்காக ஜேர்மானியர் ஒருவர் கைதானார்.

Tiefenbronn நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து 38 வயதான பெண்மணி ஒருவரது சடலமும், அவரது 8 வயது மகனின் சடலமும் பொலிசாரால் மீட்கப்பட்டது.

குறித்த கொலை சம்பவத்தை 60 வயது பொறியாளர் ஒருவர் தமது காதால் கேட்டதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

கொல்லப்பட்ட பெண்மணியின் அண்டை வீட்டாரான அந்த பொறியாளர் பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார்.

சம்பவத்தின் போது குறித்த பொறியாளரின் 11 வயது மகன், அப்பா போதும், நிறுத்துங்கள் என உடம்பெங்கும் ரத்தக்கறைகளுடன் அலறியபடி வெளியே வந்தது, அக்கம்பக்கத்தினரால் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்