யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரும் தம்பதி: மோசடி வழக்கில் கைது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
633Shares

ஓட்டுநர் உரிம ராஜா என்று தன்னை அழைத்துக்கொள்பவர் ஜேர்மனியின் Rolf Herbrechtsmeier (52).

ஜேர்மனியில் யாருடைய ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டாலும் அதற்கு பதிலாக, இன்னொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலிருந்து ஓட்டுநர் உரிமம் ஒன்றைப் பெற்றுக்கொடுத்துவிடுவார் Rolf.

இதற்கிடையில், பணம் பெற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தராமல் தங்களை ஏமாற்றிவிட்டதாக 1,000 பேர் வரை அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆகவே, Rolf மீது 37 மோசடி வழக்குகளும், மோசடி செய்ய முயன்றதாக 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Rolfக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Rolfக்கு உதவியதாக அவரது மனைவிக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்