ஜேர்மனியில் உணவகத்துக்கு சென்ற ஏழு பேருக்கு கொரோனா தொற்று?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

வடமேற்கு ஜேர்மனியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு சென்ற ஏழு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதனால், அந்த உணவகத்துக்கு சென்றவர்கள் உட்பட 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக Leer பகுதி உள்ளூர் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு இந்த குறிப்பிட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

ஜேர்மனி ஏப்ரல் 20 முதல்தான் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்