தாய்லாந்து மன்னருக்கு ஜேர்மனியிலும் தாய்லாந்திலும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் சொகுசு ஹொட்டல் ஒன்றில் அழகிகள் சூழ தங்கியிருப்பதால் மட்டுமே தாய்லாந்து மன்னரை மக்கள் எதிர்க்கவில்லையாம், வேறு பல காரணங்களும் உள்ளனவாம்.

தாய்லாந்து மன்னரான Maha Vajiralongkorn, 20 பாலியல் ராணுவ அழகிகள் சூழ, ஜேர்மனியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் உல்லாசமாக வாழ்ந்து வருவது பலருக்கும் தெரியும்.

தாய்லாந்து மன்னர் ஏன் ஜேர்மனியில் தேவையில்லாமல் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்களே கேள்வி எழுப்பியுள்ளனர்.

மார்ச் மாதத்தில், வெளிநாடு ஒன்றில் வாழும் மன்னரின் கடும் விமர்சகரான Somsak Jeamteerasakul, நமக்கு எதற்காக ஒரு மன்னர்? என எழுப்பிய கேள்வி சமூக ஊடகங்களில் பல வாரங்கள் கவனம் ஈர்த்தது.

மே மாதம் முதல் வாரத்தில், தாய்லாந்து மற்றும் ஜேர்மன் சமூக ஆர்வலர்கள் மன்னர் தங்கியிருக்கும் ஆடம்பர ஹொட்டல் முன்பு கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கொரோனா பரவத் தொடங்கிய நேரத்தில், தாய் ஏர்வேஸ் ஐரோப்பாவுக்கு செல்லும் அத்தனை விமானங்களையும் தடை செய்த நிலையில், முனிச் மற்றும் சூரிச்சுக்கு செல்லும் விமானங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டது.

அவைதான் மன்னரின் விருப்ப சுற்றுலாத்தலங்கள் என்பதை அனைவரும் அறிவர். மன்னரும் பெண்கள் படை சூழ அந்த நகரங்களுக்கு பவனி சென்று வந்தார்.

தாய்லாந்தில் ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ள நிலையில், மன்னர் மட்டும் விதிகளை மீறி ஜேர்மனிக்கும் தாய்லாந்துக்கும் இடையில் பயணம் செய்துள்ளார். அதுவும் கடும் விமர்சனங்களுக்குள்ளானது.

ஒரு நாட்டின் தலைவராக இருப்பவர், அந்த நாடு கொரோனா என்னும் சிக்கலில் இருக்கும்போதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பெண்களுடன் வேறு ஒரு நாட்டில் போய் உட்கார்ந்துகொண்டு உல்லாசம் அனுபவிப்பதால், அவர் மன்னராக இருப்பதற்கே தகுதியற்றவர் என விமர்சகர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.

ஆனால், மன்னர் Vajiralongkornக்கு அவரது நாட்டில் அவரது தந்தை அளவுக்கு புகழ் இல்லை என்பது மட்டுமல்ல, அவருக்கு மக்கள் தன்னைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும் கவலையில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுவதுதான் இன்னமும் மோசம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்