ஜேர்மனியில் மஞ்சள் நட்சத்திர போராட்டக்காரர்களுக்கு தடை: வெளியான விரிவான தகவல்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் மறுப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்ட மஞ்சள் நட்சத்திர உடை ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் மறுப்பாளர்கள் பலர் யூதர்களை குறிக்கும் மஞ்சள் நட்சத்திர உடை அணித்து முனிச் நகரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த மஞ்சள் நட்சத்திரத்தில் தடுப்பூசி தேவையில்லை எனவும், முகக்கவசம் உங்களை விடுவிக்கும் உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

மட்டுமின்றி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர், கொரோனா ஊரடங்கு நெறிமுறைகளானது நாஜிகளின் வதை முகாமை நினைவுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து முனிச் நகர நிர்வாகம் மஞ்சள் நட்சத்திர பொறித்த உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை தடை செய்துள்ளது.

மட்டுமின்றி மஞ்சள் நட்சத்திரத்தின் பயன்பாடு இப்போது பொருந்தக்கூடிய ஆர்ப்பாட்டங்களுக்கான விதிமுறைகளை மீறுவதாக கருதப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் எவரேனும் தங்கள் உடையில் மஞ்சள் நட்சத்திரம் பொறிக்கப்பட்டிருந்தால், அபராதம் விதிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா எதிர்ப்பு போராட்டங்களில் யூதர்களை குறிக்கும் மஞ்சள் நட்சத்திரம் இடம்பெறுவது ஜேர்மன் அரசாங்கத்தை கவலை கொள்ள வைத்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்