ஜேர்மனியில் கொரோனா விதிகளை மீறி ஹூக்கா புகைக்கும் விடுதி திறப்பு: 330 பேருக்கு சிக்கல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் நகரமான Göttingenஇல் திடீரென 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தற்போது அந்த தொற்று பரவலுக்கு காரணம், ஹூக்கா புகைக்கும் ஒரு விடுதி என்பது தெரியவந்துள்ளது.

சட்டப்படி அந்த விடுதி திறக்கப்பட்டிருந்திருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், விதிகளை மீறி அது செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அந்த ஷிஷா பாரை அதிகாரிகள் மூட உத்தரவிடுவதற்கு முன்பு, அங்கு நூற்றுக்கணக்கானோர் சென்று ஹூக்கா புகைத்துள்ளனர்.

ஆனா, அவர்கள் ஒரே குழாயில் புகைபிடித்தார்களா என்பது குறித்து தெரியவில்லை. அந்த விடுதிக்கு அபராதம் விதிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

கொரோனா தொற்றியவர்களுடன் தொடர்பிலிருந்த 310 பேரை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளார்கள்.

அவர்களில் ஏராளம் சிறுவர்களும் இளைஞர்களும் அடக்கம். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் மளிகைக் கடைக்கு செல்வதற்காகக் கூட தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்