நீண்ட 13 ஆண்டு போராட்டம்... மாயமான பிரித்தானிய சிறுமி வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: முக்கிய பெயரை வெளிட்ட பொலிஸ்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

போர்த்துகல் நாட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டு மாயமான பிரித்தானிய சிறுமி தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர் ஜேர்மன் பொலிசார்.

சிறார் துஸ்பிரயோக வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் தற்போது 43 வயதான கிறிஸ்டியன் ப்ரூக்னர் என்பவரே பிரித்தானிய சிறுமியான மேடலின் மெக்கான் என்பவரை கடத்தியவர் என பொலிசார் தற்போது உறுதி செய்துள்ளனர்.

இருப்பினும் அவரது உண்மையான பெயரை இதுவரை பொலிஸ் தரப்பு பொதுமக்கள் மத்தியில் வெளியிடவில்லை.

இதுவரை சிறுமி மேடலின் மாயமானதாகவே வழக்கை விசாரித்து வந்ததாகவும், ஆனால் தங்களிடம் போதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், இனி கொலை வழக்காக விசாரிக்க உள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அந்த நபர் ஒரு வெள்ளை நிற ஜேர்மன் குடிமகன் எனவும், குறுகிய பொன்னிற தலைமுடியை கொண்டவர் எனவும், சிறுமி மேடலின் மாயமான காலகட்டத்தில் 6 அடி உயரமுள்ளவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

போர்த்துகல் நாட்டில் அல்கார்வே கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா தலத்தில் மேடலின் மாயமாவதற்கு சில நாட்கள் வரை ப்ரூக்னர் அப்பகுதியில் காணப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும், 2005 ஆம் ஆண்டு போர்த்துகலில் 72 வயதான ஒரு அமெரிக்க பெண்மணியை துஸ்பிரயோகம் செய்த வழக்கில் ப்ரூக்னர் 7 ஆண்டு சிறை தண்டனையை எதிர்கொண்டு வந்துள்ளார்.

போர்த்துகலில் கடற்கரை இல்லத்தில் இருந்து பிரித்தானிய சிறுமி மேடலின் மாயமாகும்போது அவருக்கு 3 வயது எனவும், தற்போது அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஜேர்மன் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சிறுமி மேடலின் விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் 43 வயது ப்ரூக்னர் ஏற்கனவே நீண்ட கால தண்டனை அனுபவித்து வருகிறார் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

1995 முதல் 2007 ஆம் ஆண்டு வரை ப்ரூக்னர் அல்கார்வே கடற்கரை பகுதியில் குடியிருந்து வந்ததாகவும் ஜேர்மன் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கை போர்த்துகல் பொலிசாருடன் ஜேர்மன் பொலிசாரும் இணைந்து இதுவரை விசாரித்து வந்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்